என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தியாகிகள் நினைவிடம்
நீங்கள் தேடியது "தியாகிகள் நினைவிடம்"
அந்தமான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். #Moditribute #AndamanJail #CellularJail
போர்ட் பிளைர்:
வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிக்கி இருந்தபோது மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்களை அன்றைய ஆட்சியாளர்கள் அந்தமான் தீவுக்கு கப்பலில் அனுப்பி, அங்குள்ள தனிமை சிறையில் அடைத்துவைத்து சித்ரவதைப்படுத்தினர்.
காலா பானி என்றழைக்கப்படும் இந்த சிறையில் சுதந்திர போராட்ட தியாகிகளில் சிலருக்கு முன்னர் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அந்தமான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலா பானி சிறையை பார்வையிட்டார்.
அங்குள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மோடி, கடந்த 1911-ம் ஆண்டு இந்துத்துவா தலைவரான வினாயக் தாமோதர் சவர்க்கார் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு சென்றார்.
சவர்க்கார் படத்தின் முன்னர் சிறிது நேரம் கண்களை மூடியவாறு மவுனமாக அமர்ந்து தியானம் செய்தார். பின்னர், அங்குள்ள தூக்கு மேடை மற்றும் சிறை அருங்காட்சியகம் ஆகியவற்றையும் மோடி பார்வையிட்டார். #Moditribute #AndamanJail #CellularJail
×

X